சஜித் அணியினர் சிலர் ஐ.தே.கட்சியில் இணைவு: பாலித்த ரங்கே பண்டார தகவல்…! samugammedia

எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர், ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில், எமது அரசியல் செயற்பாடுகள் கொண்டு செல்லப்படவில்லை.

கடந்த முறை போன்று இந்த முறை மே தினக்கூட்டத்தை பாரியளவில் நாம் நடத்தவில்லை.

எனினும், அனைத்து அமைப்பாளர்களும் தங்களின் தொகுதிகளில் இருந்து கட்சியை நேசிப்பவர்களுடன் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அதன்போது, பலர் எம்முடன் இணைவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Leave a Reply