புலிகளின் தலைவர் எனது அண்ணன்..! எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை! புரளியைக் கிளப்பிய சிங்களப்பெண் samugammedia

நான் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும் நல்லவர். காரணம் ஒரு தவறு நடந்தால், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.

உதாரணமாக, வித்தியாவின் படுகொலை விவகாரத்தில் இன்னமும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைத்திருக்கும். அப்படியான தவறுகளும் இனிவரும் காலங்களில் நடந்தும் இருக்காது.

அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையில் தான் குழப்பம் ஏற்பட்டிருந்தது. எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் குழப்பம் ஏற்படவில்லை.

அவர் ஒரு நல்ல மனிதர் மாத்திரமன்றி நேர்மையானவரும் கூட. ஒரு தவறுக்கு உடனடியாக தண்டனை வழங்க கூடிய ஒருவர்.

ஆனால் எங்களுடைய அரசாங்கம் வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறக்கும் வரையும், இறந்த பின்னும் அந்த வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது” – என்றார்.

Leave a Reply