பஸ் கட்டணம் குறையுமா? வெளியான விசேட அறிவிப்பு samugammedia

டீசலுக்கான விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், பஸ் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து சேவையை தரமான சேவையாக நடத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைகளையும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எடுக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

இதனால், பஸ் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *