பலரையும் வியக்க வைத்த முள்ளிவாய்க்கால் ஆசிரியர்

 முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தனியார் வகுப்புக்களை நடத்தி வருகின்றார். நான்கு வயது தொடக்கம் பத்து வயது வரையான பிள்ளைகளுக்காக அவர் வீட்டில் தனியார் வகுப்புக்களை எடுக்கின்றார்.

இந்நிலையில் அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும் பிள்ளைகள் மீதான அவருடைய அக்கறையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்தாக முகநூல் வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளாது.

ரெக்கோர்ட் புக்

அதாவது , குறித்த ஆசிரியை தன்னிடம் கற்கும் முப்பது பிள்ளைகளின் பெற்றோரிடமும் சின்னதாக “கடைக்கொப்பி” சைஸில் ஒரு ரெக்கோர்ட் புக் கொடுத்திருக்கிறார்.

அந்த ரெக்கோர்டில் பிள்ளை அன்றிரவு சுயகற்றல் செய்த நேரத்தை நேர்மையோடு பதிவு செய்து கையெழுத்து வைத்து கொடுத்து விட வேண்டும் என்பது. எழுமாற்றாக ஐந்தாம் வகுப்பு பிள்ளை ஒருவரின் இந்த ரெக்கோர்டை பார்த்த போது சந்தோசமாக இருந்தது. முக்கியமாக, ஆசிரியையின் குறிப்பும் அவர் வரைந்த சிரித்த முகமும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியப்பணியை அர்ப்பணிபுடன் செய்பவர்கள் அருகி வருகின்றனர். பலர் தமது வருமானத்திற்காக மட்டுமே வகுப்புக்களை எடுக்கின்றனர். பிள்ளைகளை அக்கறையோடு படிப்பிப்பவர்கள் மிகவும் குறைவுதான்.

அன்றாட வேலைகள் செய்துவரும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் நன்றாக படித்து வரவேண்டும் என்பதற்காக பல கஸ்ரங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு கல்வியை கொடுக்க பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியை போல தன்னிடம் படிக்க்கும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும் அக்கறையும் தான் நாளை அந்த மாணவர்கள் எம் சமூகத்தில் தலைசிறந்து வாழ் வழிஅமைக்கின்றது. 

The post பலரையும் வியக்க வைத்த முள்ளிவாய்க்கால் ஆசிரியர் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply