நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலைய சந்தியில் தனி மனித போராட்டம் முன்னெடுப்பு…!samugammedia

டிக்கோயா வணராஜா தோட்டத்தில் வசிக்கும் அன்புராஜ் என்ற தொழிலாளி இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை தனி மனித போராட்டம் ஒன்றை நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக உள்ள சந்தியில் திட்டு மேல் ஏறி நின்று நடத்தினார்.

அவர் வைத்து இருந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெருந்தோட்ட தொழிலாளர்களை தோட்ட காட்டான் என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும், பொருட்கள் விலைகளை குறைக்க ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
இவ்வாறு பல கோரிக்கைளை முன் வைத்து தனி மனித போராட்டம் ஒன்றை நடத்தினார். தொழிலாளர் தினமான இன்று அவர் இந்த தனி மனித போராட்டம் ஒன்றை நடத்தி,  ஆட்சி நடத்தி வரும் அரசாங்கத்திற்கு
பெருந்தோட்ட தொழிலாளர்கலை இனி வரும் காலங்களில் பண்ணையாளர்கள் எனவும்,பெருந்தோட்ட பண்ணையாளர்களை இனி வரும் காலங்களில் தமிழர்கள் எனவும், அழைக்கபட வேண்டும் எனவும்.2022, ஆண்டு நாடு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது அப்போது சாமான்களின் விலைகள் பன் மடங்கு உயர்ந்த போதும் மத்திய மலைநாட்டில் இன்னும் விலைகள் குறையவில்லை.
ஆட்சியாளர்கள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து தனி மனித போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply