எந்த தரப்பின் பின்னாலும் நாங்கள் செல்லமாட்டோம்- மைத்திரிபால சிறிசேன…!samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த தரப்பின் பின்னாலும் செல்லாது என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த மைத்திரிபால சிறிசேன,

எங்கள்  கட்சி எந்த தரப்பின் பின்னாலும் செல்லாது.தேவையானவர்கள் எம்முடன் வந்து கூட்டணி அமைக்க முடியும். எமக்கு தவறு ஏற்பட்ட இடங்கள் காணப்பட்டன.

எனினும், அவற்றை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதாக   குறிப்பிட்டார்.

Leave a Reply