தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஷோதான் பிக்பாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன்6 இல் பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததன் பிற்பாடு இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் ஜனனி நடித்து வருகின்றார்.
இடையிடையே போட்டோசூட்களை நடத்தி அந்த படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது “சூட்டிங் விளைவினால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய … சும்மா ஒரு அது இது தான்… என பதிவிட்டு வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார் பிக்பாஸ் ஜனனி.
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.