24வது ஆண்டில் கால்பதிக்கும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி…!samugammedia

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 23ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று(02) செவ்வாய்க்கிழமை சமய வழிபாடுகளுடனும் அரங்க நிகழ்வுகளுடனும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி. லயன்.வை தியாகராஜா, சிறப்பு விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவ ஆசிரியருமாகிய சிவலிங்கம் முரளிதரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி கலாநிதி தி. கமலநாதன் பெயரால் கல்லூரியில் அதி உயர் ஆசிரியத்துவம் மற்றும் கல்விப் பெறுபேற்றை எய்தும் மாணவ ஆசிரியருக்கு தங்கப் பொலிகை விருது வழங்கப்படவுள்ளது.

இவ்வருடம் முதல் முறையாக 2018-2020 அணியின் விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த மாணவ ஆசிரியர் ஆனந்தராசா கோகுலராஜ் இவ்விருதை பெறுகிறார். அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கு. அம்பிகைராஜன் தலைமையில், எஸ். சிறீகுமார், எஸ்.குணசி ங்கம் மற்றும் க.செழியன் மற்றும் திருமதி.ஆ.துளசி ஆகியோரின் பங்களிப் பில் இவ்விருதானது வருடாவருடம் வழங்கப்படவிருக்கின்றது.

அத்துடன் கல்லூரியில் அதி திறமை சித்தி 2 மாணவ ஆசிரியர்களுக்கும், மற்றும் திறமைச்சித்தி பெற்ற 10 முதல்நிலை மாணவ ஆசிரியர்களுக்கும் லயன்.வை. தியாகராஜா விருதும், கணிதப்பிரிவைச் சேர்ந்த அற்புதராஜா இளங்குமரனுக்கு கொவிட் காலங்களிலும், தொடர்ந்தும் மாணவ ஆசிரியர்களின் நலன்களில் அக்கறையுடன் சேவையாற்றியமைக்காக பீடாதிபதி விருதும் வழங்கப்படுகின்ற அதேவேளை, கல்லூரியின் ஆரம்ப நாளிலிருந்து இன்று வரை கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற 11 கல்வி சார் மற்றும் கல்வி சாரா பணியாளர்களும் கௌரவிக்கப்பட வுள்ளனர்.

Leave a Reply