களனி பியகம வீதியில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது, பொலிஸ் சீருடையுடன் மேடையில் ஏறி பாடல் பாடியமைக்காக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேலியகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் (52) வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
30ஆம் திகதி இரவு களனி விளையாட்டு மைதானத்தில் இந்த இசைக் கச்சேரி இடம்பெற்றதாகவும், அங்கு பாதுகாப்புக் கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு மேடை ஏறி பாடல் பாடியதாகவும் தெரியவருகிறது.
இந்த செயல்பாடு தொடர்பில் களனி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த வில்லோராச்சி விசாரணைகளை மேற்கொண்டதாகவும், இந்த கான்ஸ்டபிள் நேற்று (1) முதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.