வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேரும் நோக்குடன் சத்தான உணவை வழங்கும் நோக்குடன் வடமாகாண த்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட முன்பள்ளில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
உலக வாங்கியின் நிதி அனுசரணையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் உள்ளூராட்சி அமைச்சு, வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து குறித்த செயற் திட்டத்தினை வழி நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.