தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் நிகழ்வு…!samugammedia

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம் நேற்றையதினம் மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த மேதினப் பொதுக் கூட்டத்திற்கு  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா.பார்த்தீபன் தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் மற்றும் பசுமை இயக்கத்தின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்,
 உலகம் பூராவும் கொரோனாப் பெருந்தொற்று நோய் தொழில் முடக்கத்தை ஏற்படுத்திப் பொருளாதாரத்தைப் பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக விரைவில், பில்லியன் கணக்கானோர் தொழில் வாய்ப்பை இழக்க வேண்டி ஏற்படுமென்று ஐக்கியநாடுகள் சபை எச்சரித்துள்ளது.
 இதனைக் கருத்திற்கொண்டே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தொழிலாளர் தினத்தைச் ‘ சுற்றுச்சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதம் ‘ என்ற கருப்பொருளில் செம்பசுமை மேதினமாகக் கொண்டாடி வருவது “என்றார்.

Leave a Reply