யாழ். பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
விதுஜன் கிஷான் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவ தினமான நேற்றைய தினம் (01.05.2023) இரவு குறித்த குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியுள்ளது.
உயிரிழந்ததற்கான காரணம்
இதனையடுத்து, உடனடியாக குழந்தை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன என கண்டுபிடிக்கப்படாத நிலையில், குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
The post யாழில் பிறந்து 34 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.