ரணிலின் அழைப்பை நிராகரித்தது முன்னணி – ஒற்றையாட்சிக்குள் தீர்வு இல்லை என்று கஜேந்திரகுமார் தெரிவிப்பு! samugammedia

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசில் அங்கம் வகிக்குமாறு மே தினத்தன்று தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்த நிலையில், ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணும் முயற்சி வீண் செயற்பாடு எனச் சுட்டிக்காட்டி, அந்த அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்துள்ளது.

இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்தப்  பொறிமுறைக்குள் வந்து விசேடமாக நாடாளுமன்றத்தில் ஒரு அரசாக நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வு உரையில் தெரிவித்திருந்தார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ரணில் அரசுடன் இணைந்து தேசிய பிரச்சினைக்குத் தீர்வைக் காண முற்றாக மறுத்துள்ளது.

“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு இல்லை” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பல கூறியுள்ளார்.

Leave a Reply