ஏ.ரி.எம் தட்டுப்பாடு! வங்கிகளில் மீண்டும் வரிசையில் நிற்கும் மக்கள் samugammedia

இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செய்யும் அரச வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக ஏரிஎம்(ATM) அட்டைகள் இல்லாத காரணத்தினால், பழைய மாதிரி வங்கிக்குச் சென்று வரிசையில் நின்று நேரடியாகவே பணத்தை மீளப் பெறவேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நேர விரயமும், அலைச்சலும், மன உளைச்சலும் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அரச வங்கிகளில் புதிய ஏரிஎம்(ATM) அட்டைகளோ அல்லது காலாவதியான அட்டைகளுக்குப் பதிலான அட்டைகளோ இப்பொழுது பெற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply