தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் – சம்பவ இடத்திற்கு சென்ற சுமந்திரனும், மாவையும்

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று இரவு முதல் குறித்த பகுதிக்குள் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை பொலிசார் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பொதுக்களை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விசாரணையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு ஆன உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர்களிடம் இதன்போது தெரிவித்துள்ளனர்.

Leave a Reply