தனது பிள்ளைக்கு நஞ்சை பருக்கிய தந்தை…! மஸ்கெலியாவில் கொடூரம்…!samugammedia

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயது உடைய மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
நேற்று முன்தினம் இச் சம்பவம் மொக்கா தோட்ட மேற்பிரிவில் இடம் பெற்றுள்ளது.
நஞ்சு பருக்கியதாக கூறப்படும் 20 வயது உடைய பெண் நேற்று முன்தினம் இரவு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் வேளையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது தந்தை தனக்கு நஞ்சு பருக்கியதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் கீழ் சந்தேக நபரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர் டிக்கோயா பகுதியில் உள்ள டில்லிரி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த வேளையில் அங்கு வைத்து நேற்று இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த இளம் யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகையில்,
சம்பந்தப்பட்ட யுவதியின் தாய் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார் எனவும் அத் தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் . மூன்று பேரும் பெண்கள் எனவும் 9 வயது 11வயது 20 வயது உடையவர்கள் என கூறினார்.
இவ்வாறு பெண் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு செல்வதால் இவ்வாறு பல குற்ற செயல்கள் இடம் பெற்று வருகிறது. ஆகையால் மலையக பகுதிகளில் இனியும் வெளிநாட்டு வேலைக்கு பெண்கள் போவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *