மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் துயரச்சம்பவம்…!கண்ணீருடன் நிற்கும் தாய்…!samugammedia

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுவிட்டது.

இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய குறித்த கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது.

இதன்போது அங்குவந்த அதன் தாயும் சகோதர குட்டியும் கண்ணீர் சிந்திய நிலையில் கன்றுக்குட்டியின் சடலத்திற்கு அருகில் காணப்படுவது காண்போருக்கு வேதனையை ஏற்படுத்திவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *