தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது- பிரதேச செயலர் உறுதி…!samugammedia

தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என  தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ இன்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலி வடக்கு தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும்  நேற்றுமுதல்(03) பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என்பதை  தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ உறுதிப்படுத்தினார்.

அதேவேளை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா,  குறித்த விகாரை அமைந்துள்ள நிலங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை தருமாறும் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Leave a Reply