
ராஜகிரிய நூராணியா ஜும்ஆப்பள்ளிவாசல், அதன் கீழ் இயங்கும் மத்ரஸதுல் நூராணியா ஹிப்ழ் கல்லூரியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முகாமைத்துவக்குழு அனுமதியின்றி நிதா பவுண்டேஷன் எனும் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வக்பு சபையில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.