தோப்பூரில் இரண்டாவது நாளாக தொடரும் கையெழுத்து வேட்டை…!samugammedia

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய தோப்பூர் இலங்கை வங்கி கிளையை அமைத்துத் தருமாறும், ATM இயந்திரம் பொருத்தித் தருமாறு கோரியும் பொதுமக்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கும் பணி இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை திருகோணமலை-தோப்பூரில் இடம்பெறுகின்றது.

தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம் மக்கள் ஆர்வத்துடன் தமது கையொப்பங்களை வழங்கி வருகின்றனர்.
தோப்பூர் வர்த்தக சங்கம், தோப்பூர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.பொதுமக்களின் 5000 கையெழுத்துக்கள் பெறப்பட்டு அதனுடைய பிரதிகள் தோப்பூர் இங்கை வங்கி முகாமையாளர்,திருகோணமலை காரியாலயம்,கொழும்பு தலைமை காரியாலயம் போன்றவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தோப்பூரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் ஆளணி பற்றாக்குறை,கட்டிட பிரச்சினை,ATM இயந்திரம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் இதனை நிவர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவ் கையெழுத்துக்கள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply