வாகநேரியில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கானவர்களிற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்! samugammedia

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகநேரியில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கானவரின் இறுதி மரணச் சடங்கின் போது பிரதேச வாசிகளினால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வாகநேரி சவக்காலையில் ஒன்று கூடியவர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி அமைதி வழி போராட்டத்தினை மேற்கொண்டனர்.ஜனாதிபதி அவர்களே எமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுங்கள்.இது இறுதி மரண ஊர்வலமாக அமையட்டும்.

எங்களது உயிர்களை பாதுகாக்கவும்.யானை வேலிகளை அமைத்து எங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கவும் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

 நீண்ட காலமாக யானையின் தொல்லையினால் உயிரி சேதம் மற்றும் பொருள் சேதங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கான தகுந்த தீர்வினை பெற்றுத் தருமாறு பல முறை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லையென கவலை தெரிவித்தனர். 

கடந்த புதன் கிழமை இரவு (3) வாகநேரியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அ.ஜெயந்தன் வயது (24) என்பவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

வழக்கம் போல் மாடு கட்டும் தொழிலுக்கு சென்று வீடு திரும்பும் வழியில் வீட்டில் அருiகாமையில் நின்ற  இவரை தாக்கியுள்ளது.

தாக்குதலுக்காப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.குறித்த சம்பவம் பிரதேச மக்களிடேயே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவனை இழந்த மனைவி,பிள்ளை மற்றும் உறவினர்கள் ஆழந்த சோகத்தில் உள்ளனர்.

Leave a Reply