தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வினை வலியுறுத்த வேண்டிய காலம் இது – கருணாகரம் கோரிக்கை! samugammedia

தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வினை வலியுறுத்தவேண்டிய காலம் என்பதனால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றுபடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்தார்.

இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித்தலைவரும் முன்னாள் மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.

இதன்போது கட்சி முக்கிஸ்தர்கள்,முன்னாள் மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தலைவர் சிறிசபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுப்பேரூரை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

சிறிசபாரட்னம் அவர்கள் ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப்பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாரோ அதேநோக்கத்துடன் தமிழீழ விடுதலைஇயக்கத்தின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒற்றுமையினை முன்னிறுத்திவருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலமிருந்து இன்றுவரையுள்ள கட்சியாக ஒரு இயக்கமாக தமிழீழ விடுதலை இயக்கம் இருக்கின்றது.நாங்கள் எங்கள் தலைவரை இழந்தாலும் கூட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்காக நாங்கள் ஒன்றாக செயற்படுவோம் என்று உறுதியாக செயற்பட்டுவருகின்றோம்.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்த பலமும் இல்லாத நிர்க்கதியாக நிற்கும் இந்தவேளையில் நாங்கள் பலமாக ஒற்றுமையாக இருக்கவேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் காணப்படுகின்றது.இன்று வடகிழக்கில் ஆயுதப்பலம் இல்லாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தினால் எமது நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றது.தினமும் வடகிழக்கு பகுதிகளில் சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் இன்று அதிகாரங்கள் இல்லாமல் ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது.ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் ஆளுனர்கள் தாங்கள் நினைத்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்கள்.நேற்று முன்தினம் கூட நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கின் தையிட்டி பகுதியிலேயே விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள புராதன இடங்களான கன்னியா,திருக்கோN:ணஸ்வரம்,குசனார்மலை போன்ற பகுதிகளிலும் வடக்கில் வெடுக்குநாறி,குருந்தூர்மலை,நாவற்குளி போன்ற இடங்களில் பௌத்த மதம் என்று கூறிக்கொண்டு கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன.

இந்திய அரசாங்கமானது 13வது திருத்ததின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபையின் முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை நடாத்தவேண்டும் என்ற அழுத்ததினை வழங்கவேண்டும்.ஆனால் எங்களுக்குள் ஒற்றுமையில்லை.

சரத்வீரசேகர,விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்த சட்டமும்வேண்டாம் அதன்ஊடாக வந்த மாகாணசபையும் வேண்டாம் என்கிறார்கள்.வடகிழக்கில் அதேகொள்கையுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செயற்படுகின்றது.

ஆனால் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் மாகாணசபையின் முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் மிக விரைவாக நடாத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றோம்.

நாங்கள் இன்று ஒன்றாகயிருக்கவேண்டிய காலம், ஒற்றுமையாகயிருக்கவேண்டிய காலம். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட இன்று பிரிந்துகிடக்கின்றது.தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாகி நாங்கள் எமது உரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை அனைத்துதமிழ் தரப்பினரும் உணரவேண்டும்.

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சியை வளர்ப்பதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துவிதமான அட்டூழியங்களையும் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும்.

சிறிசபாரத்தினம் அவர்கள் 1984ஆம் ஆண்டு ஜேர்மனியில் வைத்து கூறியிருந்தார் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது என்று.ஆனால் இன்று தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டம் அற்ற நிலையிலிருக்கின்றோம்.அரசியல் ரீதியாக பலமற்ற நிலையில் உள்ளோம்.நாங்கள் இந்தியாவினை நம்பியிருக்கின்றோம்.

இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையினைப்பொறுத்த வரையில் கேள்விக்குறியாகிக்கொண்டிருப்பதை இந்தியாகூட உணராமல் இருக்கின்றதா?அல்லது உணர்ந்துகொண்டு காலம் தாழ்த்திக்கொண்டிருக்கின்றதா என்பதை சிந்திக்கவேண்டும்.

இலங்கையினைப்பொறுத்த வரையில் இன்று சீனா அகலக்கால் பதித்துவருகின்றது.அம்பாந்தோட்டை,கொழும்பு போன்ற பகுதிகளிலும் காலூன்றிய நிலையில் வடகிழக்கிலும் காலூன்ற எத்தனிக்கின்றனர்.வடக்கில் காலை வைத்துவிட்டார்கள்.

இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.பொருளாதார ரீதியாக மீ{ட்சிபெறுவதற்கு உதவிய இந்தியா,தமிழ் மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை மிக விரைவாக நடாத்துதற்கு உறுதி செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *