சங்கானையில் திடீரென ஒன்றுகூடிய மக்கள்…! வெடித்துச் சிதறிய தேங்காய்கள்…!samugammedia

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந் தோறும் இடம்பெறும்  பாரம்பரிய விளையாட்டு விழாவின் முதலாம் நாளான இன்றைய தினம் போர்த் தேங்காய் நிகழ்வு சங்கானை மாவடி ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

பல்வேறு பிரிவுகளாக இடம்பெற்ற போர்த் தேங்காய் போட்டிகளில் சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் பங்குபற்றினர்

அதேவேளை சிறுவர்களுக்கான கேக் உண்ணும் போட்டியும், தயிர் முட்டி அடிக்கும் போட்டியும்  இடம்பெற்றதுடன்  குறித்த போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

அதேவேளை போர்த் தேங்காய் போட்டியினை பார்வையிடுவதற்கு பல்வேறு பகுதிகளிளும் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்.

Leave a Reply