வல்வெட்டித்துறையில் நடந்த இந்திர விழா- ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு! samugammedia

யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று (05.05) இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.

இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.

இதில் முக்கிய வீதிகளிலும் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் இடம்பெற்று இன்று அதிகாலையில் முத்துமாரி அம்மன்,சமேதராக ஆலயத்தின் வந்தடைந்தனர்.

இதில் லந்துகொண்ட பக்தர்கள் முத்துமாரியம்மனின் அருட்காடச்சத்தினை பெற்றுச் சென்றனர்.

Leave a Reply