மன்னாரில் டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களுக்கான நினைவு அஞ்சலி நிகழ்வு!samugammedia

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் அவருடன் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களின் 37 ஆவது நினைவு தினம் இன்று சனிக்கிழமை(6) காலை 11 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட தலைமை அலுவலகத்தில் அதன் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் டெலோ கட்சியின்  பிரச்சார செயளாலர் கனேசலிங்கம் சொக்கன் ,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ரெட்ணசிங்கம் குமரேஸ் டெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply