யாழில் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு..!samugammedia

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் அவருடன் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களின் 37 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இந்நிலையில் வடக்கு ,கிழக்கின் பல பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தினை பொறுத்த வரையில், சிறீ சபாரத்தினம் மரணித்த இடமான யாழ்ப்பாணம் உரும்பிராய் அன்னங்கை எனும் இடத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் டெலோவின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply