வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வது போன்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நிலையில் பொலிசாரினால் சோதனையிடப்பட்டிருந்தனர்.
இதன்போது அவரது உடமையில் இருந்து சுமார் 84 லட்சம் ரூபா பெறுதியான 600 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சபர் 37 வயதுடையவர் என்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.