
கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழையான தீர்மானம் மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், பிழையான தீர்மானம் மேற்கொண்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இவ்விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்று நியமித்து இதன் பின்னணி கண்டறியப்பட வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.