தமிழரசு கட்சி அலுவலகத்தில் பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! samugammedia

பாடசாலை மாணவர்களிற்கு பாதணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு  லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவினாயகர் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் தெரிவு செய்ய்பட்ட மாணவர்களை உள்ளடக்கி இன்று பிற்பகல் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவினாயகர் ஆலய அறங்காவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சிறிதரன், சரத் வீரசேகர இன்றைய தினம் வெடுக்குநாறி மலைக்கு படை பட்டாளங்களுடன் சென்றுள்ளமை மீண்டுமொரு இனவாதத்தை கக்கும் செயலாக அமையக்கூடும் என ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *