கண் சத்திரசிகிச்சைக்கு பின்னர் கண் பார்வையை இழந்த நோயாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்.! samugammedia

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில், கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வை இழந்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சத்திரசிகிச்சைகளுக்குப் பின்னரும் பார்வையில்லாத காரணத்தினால் மீண்டும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கண் சத்திர சிகிச்சையின் பின்னர், பார்வை இழந்த மேலும் 06 நோயாளர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கண் மருத்துவமனையில் மருந்தைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, சமீபத்தில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருந்தைப் பயன்படுத்திய பின்னர் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருந்து மாதிரிகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், மருத்துவமனைகளில் இருந்து சர்ச்சைக்குரிய மருந்து வகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply