ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் மன்னார் விஜயம்! samugammedia

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்றைய தினம் (07) ஞாயிற்றுகிழமை மன்னார் மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விவசாய அமைப்பு, மீனவ சங்கப் பிரதிநிதிகள்,  சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளீர் அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடும் முகமாக குறித்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் ஓய்வு நிலை ஜெனரல் றனுல ராஜ கருண ,கிராமிய பொருளாதார இராஜங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் றஞ்சித் குணரெட்ண ,பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் தர்சின் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர் பஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பொது குழு தெரிவும் இடம் பெற்றது

குறித்த நிகழ்வுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விவசாய அமைப்பு, மீனவ சங்கப் பிரதிநிதிகள்,  சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளீர் அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகிய பலரை அழைத்திருந்த போதிலும் பெரும்பாலானோர் வருகை தரவில்லை என்பதுடன் கதிரைகள் வெறுமையாக காணப்படமையையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply