வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் செவ்வாய் அதிகாலை முக்கிய நிகழ்வு..! ஒன்றுகூடுமாறும் அழைப்பு…!samugammedia

வவுனியா, ஒலுமடு  வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் செவ்வாய்கிழமை(10)  அதிகாலை 3 மணிமுதல் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் குறிப்பிடுகையில்,

எமது இனத்திற்கே உரித்தான பூர்வீக நிலங்களில் இடம் பெறும் எமது பண்பாட்டு பாரம்பரிய நிகழ்வுகளின் போதான எங்கள் பங்கேற்பின் குறைவும் அவ் இடங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதற்கும் அதில் காணப்படும் தமிழர் மரபுசார் அடையாளங்கள் அழிக்கப்பட்டு அதன் வரலாறுகளை மாற்றியமைப்பதற்கும் வாய்பாக அமைக்கின்றது.

வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வர கோவிலின் சங்காபிஷேகம் 10.05.2023 செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிமுதல் நடைபெறவுள்ளது.

ஆகவே அவ் நிகழ்வுகளில் தமிழராய் ஒன்றுபட்டு பங்கேற்று எமது நிலத்தினையும் எமது அடையாளங்களையும் பேணிப்பாதுகாத்து ஆதித் தமிழன் என்றுரைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply