தலதா மாளிகைக்கு மேல் பறந்த ஆளில்லா விமானம்..! இரண்டு சீன பிரஜைகள் கைது! samugammedia

கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள கண்டி பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி, ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனப் பிரஜைகள் இருவரும் இன்று காலை 7:00 மணியளவில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆளில்லா விமானத்தை கண்டி பிரிவு தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகையோ அல்லது அதனுடன் இணைந்த பாதுகாப்பான வலயமோ காணப்படாததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில், சீன பிரஜைகள் இருவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் சுற்றுலா பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply