வரலாற்றுச் சாதனை படைத்த வல்லை இந்திர விழா..! குவியும் பாராட்டுக்கள்..!samugammedia

யாழ் வடமராட்சி  வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திரவிழா, வரலாற்றில் மட்டுமல்ல இலங்கையிலே இதுவரையில் எந்தவொரு மின்னமைப்பினாலும் கட்டமைக்கப்படாத, இந்து தெய்வங்களின் உருவங்களை மிகவும் பிரமாண்டமாக மின்னலங்காரங்களால் வடிவமைத்து வரலாற்றுச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

குறித்த இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு கொண்டு சென்றமை ஆதிவைரவர் மின்னமைப்பின் வேலைப்பாடே காரணமாக அமைந்தது.

அந்தவகையில்,

2023 ஆண்டில் இந்திரவிழாவில் ஆஞ்சநேயர் உருவம் பதிக்கப்பட்ட பதாதை 70 அடி உயரமாகவும், மாயவர் உருவம் பதிக்கப்பட்ட பதாதை 28 அடி உயரமாகவும்,  ஸ்ரீ முத்துமாரியம்மன் உருவம் பதிக்கப்பட்ட பதாதை 46 அடி அகலம் உடையதாகவும், கிருஷ்ணர் ராதை 34 அடி உயரமாகவும் வடிவமைக்கப்பட்டு காட்சியளித்ததுடன் ஏராளமான பக்தர்களின் மனதினை கொள்ளையடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *