புகையிரதப் போக்குவரத்து தடைப்பட்டமையால் வவுனியா – கொழும்பு மேலும் ஒரு சொகுசு பேரூந்து சேவை! samugammedia

திருத்த வேலை காரணமாக வவுனியா- கொழும்பு புகையிரதப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால் வவுனியாவில் இருந்து கொழும்புக்கான மேலும் ஒரு சொகுசு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இன்று முதல்  இரவு 1.30 மணிக்கு அதி சொகுசு பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பை சென்றடையும். பின்னர் கொழும்பில் இருந்து நண்பகல் 12.30 இற்கு புறப்பட்டு மாலை வவுனியாவை வந்தடையும்.  இதற்கான ஆசனப் பதிவுகளை புதிய பஸ்நிலையத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.

இதேவேளை, ஏற்கனவே இரவு 11 மணிக்கு ஒரு அதிசொகுசு பேரூந்து வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று, காலை 9.30 இற்கு மீண்டும் வவுனியா நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply