ஒரு வார கால வேலைநிறுத்தம்?? அதிரடி தீர்மானம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! samugammedia

செவ்வாய்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,

அமைச்சருடனான செவ்வாய்கிழமை கலந்துரையாடலில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

நேற்று இரவு 12 மணியுடன் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிந்தது. அமைச்சின் செயலாளர் தலையிட்டு ரயில்வே பொது மேலாளருக்கு ஆலோசனை வழங்குவார் என நம்புகிறோம்.

அமைச்சர் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு இணங்கியுள்ளார்.

தீர்வு கிடைக்காவிட்டால் நாங்கள் ஒரு வார கால வேலைநிறுத்தத்தத்திற்கு எந்த நேரத்திலும் தயார் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *