யாழில், தென்னந் தோட்டத்தில் பூட்டப்பட்டிருந்த இரகசிய ஒளிப்பதிவு காமராக்களை திருடியவர் கைது! samugammedia

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடத்தனை மேற்கு பகுதியில் தென்னந் தோட்டத்தில் பூட்டப்பட்டிருந்த ரகசிய ஒழிப்பதிவு காமராக்களை களவாடிய நபரை பருத்தித்துறை பொலிசார் சுற்றி வளைத்து வரணி பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

நேற்றைய தினம் (11.05.2023) வடமராட்சி கிழக்குக் குடத்தனை மேற்கு பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் பூட்டப்பட்டிருந்த ரகசிய ஒழிப்பதைவு கேமராக்களை களவாடி சென்றுள்ளதாக பருத்தித் துறை  பொலிசிற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அது தொடர்பில் பருத்தித் துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமர சிங்க தலைமையிலான போலீஸ் குழுவினர் குறித்த களவு தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம்  பகுதியில் வைத்து களவாடப்பட்ட ரகசிய கேமராக்கள் உட்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply