ஐ.எம்.எப். ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை! samugammedia

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதன் மூலம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை அதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அமைய கடன் எல்லை அதிகரிக்கும் செயற்பாடு இடம்பெறவில்லை எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டின் மூலம் அரசாங்க திறைசேரி உண்டியல் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய 5 ஆயிரம் பில்லியன் ரூபா என்ற கடன் எல்லையை 6 ஆயிரம் பில்லியன் ரூபாவாக மாத்திரமே அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply