யாழ்ப்பாண மாணவர்களை திடீரென சந்தித்த ஜனாதிபதி..! samugammedia

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo கண்காட்சி 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது.

இக்கண்காட்சியில் பங்கெடுக்க அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்ட மாணவ மாணவியரை சந்தித்து உரையாடினார்.

இதன்போது, எதிர்கால கல்வி முன்னேற்றத்தில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு நாட்டுக்கு அவசியம் என்றும், தொழிற்கல்வியில் அதிகம் ஈடுபாடு காட்டுமாறும் ஜனாதிபதி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *