அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் – கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு !samugammedia

தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது.

2022 வருடாந்த மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது சேவைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இது சட்டவிரோதமான செயலாகும். அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களது பாடசாலைகளில் இருந்து உடனடியாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு கடமைகளை வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மூன்று நாட்களுக்குள் அனைத்து அதிபர்களும் விவரங்களைத் தம்மிடம் தெரிவிக்குமாறும் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply