திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது – தமிழரசு கட்சியின் மாவட்டத்தலைவர் குகதாசன் தெரிவிப்பு! samugammedia

திருகோணமலை மாவட்டத்தில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த தாய்லாந்து நாட்டினை சேர்ந்த பௌத்த மத தலைவர்களது சடங்கானது இடமாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை தடுக்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் இருந்து வரும் குழுவினரால் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் பிரித் நிகழ்வு ஒன்று ஏற்பாடாகி இருந்தது.

அந்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய இன நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் இரத்துச்செய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் மாவட்டத்தலைவர் குகதாசன் தெரிவித்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட செயலாளர் செல்வராசா மற்றும் பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் குறித்த இடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய பாதயாத்திரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply