சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால், மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை கிடையாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட உள்ள எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயார் என குறிப்பட்டுள்ளார்.
நாட்டு மக்களின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்கதிக்கே உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு இடமளிக்கபோவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது