இரண்டு சடலங்கள் மீட்பு – அனுமதியற்ற மின்சார வேலி அமைத்தவர் கைது.! samugammedia

மினுவாங்கேட் வல்பலுவ பிரதேசத்திலுள்ள குளமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்களும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பபட்டிருந்த நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மின்சார வேலியை அமைத்துள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில்  37 வயதுடைய நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கேட் வல்பலுவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேக நபர் அவரது  காணியை சுற்றி சட்டவிரோதமான முறையில் மின்சார கம்பிகள் மூலம் வேலி ஒன்றை அமைத்துள்ளதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை சந்தேக நபர் தண்ணீரில் வீசியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அனுமதியற்ற மின்சார வேலி அமைத்தமை மற்றும் இரண்டு பேரைக் கொன்று இறந்தவர்களின் சடலங்களை மறைத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் வாரியபொல நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

Leave a Reply