மூதூரில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! samugammedia

தமிழர்களின் கரைபடிந்த நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் திரு ஹரிகரகுமார், பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply