'மொக்கா' சூறாவளியின் தாக்கம் ஆரம்பம்: 120 மைல் வேகத்தில் கடும் காற்று! samugammedia

‘மொக்கா’ சூறாவளியின் வலு மேலும் அதிகரித்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் மியன்மாரின் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.

இதனையடுத்து அங்கு கடும் மழையுடனான வானிலை நிலவுவதுடன் மணித்தியாலத்துக்கு 120 மைல் வேகத்தில் கடும் காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைக்கொண்டுள்ள குறித்த சூறாவளி காரணமாக கரையோர பிரதேசங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 4 மீற்றருக்கும், அதிகமாக உயரத்தில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஏராளமான வீடுகள் பகுதியளவில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

கடும் மழை மற்றும் வெள்ளம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், பாரிய மண்சரிவுகள் இடம்பெறலாம் என பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply