ஜனாதிபதி தேர்தல் அறிவித்தது – தேர்தல்கள் ஆணைக்குழு – வாக்காளர் பட்டியலில் சேகரிப்பு ! samugammedia

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே இம்முறை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் நோக்கில், கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரித்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று பரவல் நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதை நிறுத்த கிராமசேநை அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

எனினும் இம்முறை கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம அலுவலர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் வீட்டில் இல்லை என்றால், உடனடியாக கிராம அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் பதிவுப் பணியை நிறைவு செய்யப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply