பதுளை மாவட்டத்திலுள்ள பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழக ஊவா வெல்லஸ்ஸ மருத்துவ பீடத்தின் புதிய மருத்துவ பீட மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த வைத்தியசாலை, போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடத்திற்கு தேவையான பதுளை வைத்தியசாலையின் வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.