யாழ் காரைநகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு…!samugammedia

காரைநகர் வலந்தலை முத்துமாரியம்மன் ஆலயம் முன்றலில் இன்றைய தினம்(15) திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன், உப தவிசாளர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply