சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை…!விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!samugammedia

நாட்டில் இதுவரை 33 ஆயிரத்து 742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நலிந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அத்துடன், இந்த வருடம் டெங்கு நோயினால் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நலிந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வருகின்ற சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது, கடந்த இரண்டு நாட்களில் 3ஆயிரத்து 142, நுளம்புகள் பெருகுகின்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் மற்றும் போக்குவரத்து பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் 3,344 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படையினர், பொலிஸ், சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளுராட்சி நிறுவன ஊழியர்கள், உள்ளூராட்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஏனைய மக்கள் உட்பட 7,351 பேர் டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

Leave a Reply