நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்! samugammedia

நல்லூர், சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் உள்ள சங்கிலியன் தோரண வாயிலானது யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல், அவற்றை பாதுகாத்து, எமது எதிர்கால சந்ததியினருக்கு அச்சின்னங்களை ஒப்படைக்கவேண்டிய தார்மீகக் கடமையுணர்வோடு யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் (JAFFNA HERITAGE CENTER) முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்றிட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply